<>அறிவோம்; அறிவு வளர்ப்போம்!!<>
<>தெரிவோம்: தெளிவுபெறுவோம்!!<>
இந்தியா -சீனாவின்
பொருளாதார எழுச்சியை மேற்கத்திய
நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும்:
பிரதமர் மன்மோகன் சிங்.
து தில்லி, டிச. 7: இந்தியா மற்றும் சீனாவின்
பொருளாதார எழுச்சியை மேற்கத்திய நாடுகள்
ஒப்புக்கொள்ள வேண்டும் என பிரதமர்
மன்மோகன் சிங் தெரிவித்தார்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் ஆசிய
மன்றத்தில் அவர் வியாழக்கிழமை பேசியது:
உலக வர்த்தகத்தில் சீர்திருத்தங்கள் எவ்வளவு
முக்கியமோ அந்த அளவுக்கு ஐ.நா. சபை மற்றும்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மாற்றமும் முக்கியம்.
சர்வதேச அளவில் புதிய நாடுகளின் எழுச்சியை
ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐ.நா. சீர்திருத்தம்
மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மறுசீரமைப்பு
ஆகியவற்றுக்கு இது மிகவும் முக்கியம்.
ஆசியாவில் ஏற்பட்டுள்ள எழுச்சியின் விளைவுகளை
மேற்கத்திய நாடுகள் உணரவேண்டும். சுற்றுச்சூழல்
பாதுகாப்பு, எரிசக்தி விநியோகம் உள்ளிட்ட
பல்வேறு விஷயங்களுக்கு இது மிகவும்
உதவியாக இருக்கும்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஐரோப்பாவின்
எழுச்சியை எப்படி உலகம் ஏற்றுக்கொண்டதோ அதுபோல ஆசியாவில் புதிய பொருளாதார நாடுகளின் எழுச்சியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
இந்தியாவும் சீனாவும் கணிசமான அளவில் தங்கள்
பங்களிப்பை செலுத்துகின்றன. இத்தனைக்கும் இரு
நூற்றாண்டுகளாக காலனி ஆதிக்கக் கொடுமைக்கு
இந்த இருநாடுகளும் இலக்காகி இருந்தன.
பொருளாதார வளர்ச்சியில் ஜப்பான் தொடர்ந்து
உச்சியில் இருக்கிறது. கிழக்கு மற்றும் தென்கிழக்கு
ஆசியாவில் புதிதாக தொழில்மயமாகும் பொருளாதார
நாடுகளும் வளர்ச்சி அடைந்துள்ளன.
எழுச்சி பெற்றுவரும் ஆசியாவும் பொதுவாக
வளர்முக நாடுகளும் புதிய சவால்களை
எதிர்கொண்டிருக்கின்றன. அறிவுசாரந்த,
தொழில்நுட்பரீதியிலான, அமைப்புரீதியிலான,
அரசியல்ரீதியிலான சவால்கள் நம்முன் உள்ளன.
உலகமயம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு
இன்னமும் விடைகிடைக்கவில்லை. பொருளாதார
ஒழுங்குகள் கூட முறையாக வகுக்கப்படவில்லை
என்றார்.
***** *** *****
சீனாவில் புதிய சீர்திருத்தங்கள் அறிமுகம்:
அதிபர் முனைப்பு.
பெய்ஜிங், டிச. 6: சீனாவில் புது சீர்திருத்தங்களை
அறிமுகம் செய்வது பற்றி பரிசீலனை செய்கிறார்
அந்நாட்டின் அதிபர் ஹூ ஜின்டாவ்.
இந்திய ஜனநாயக அரசியல் அமைப்பால்
கவரப்பட்டு புதிய சீர்திருத்தங்களை அமல்
செய்ய அவர் முன்வருகிறாரோ என்ற
கருத்து உருவாகியுள்ளது.
இந்தியாவில் அண்மையில் சுற்றுப்பயணம்
மேற்கொண்ட ஹூ ஜின்டாவ் பல்வேறு கட்சித்
தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர்
நாடு திரும்பிய கையோடு, ஆளும் சீன கம்யூனிஸ்ட்
கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் பேசிய அவர்
அடித்தள நிலையில் ஜனநாயக நடைமுறையை மேம்படுத்தவேண்டியது அவசியம் என்று
வலியுறுத்தியுள்ளார்.
ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில்
பொதுச் செயலராக உள்ள ஹூ ஜின்டாவ்,
வெள்ளிக்கிழமை நடந்த பொலிட் பீரோ
கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
எல்லா நிலையிலும் சட்ட மன்றங்களுக்கு
துணைத் தலைவர்களை தேர்வு செய்வதும்,
அடித்தள நிலையில் நேரடி ஜனநாயக முறையை செயல்படுத்துவதும் மக்கள் பங்கேற்கும் ஜனநாயக
அமைப்புக்கு ஆதாயமாக இருக்கும் என்று அவர்
கருத்து தெரிவித்தார்.
அடித்தள அமைப்புகளில் ஜனநாயக உரிமைகளை
மக்களே நேரடியாக நிறைவேற்றுவதை அரசு உறுதி
செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாடு
2007ல் நடக்கவுள்ளது. அதில் அவர் மீண்டும் தேர்வு
செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கீழ்நிலையில் ஜனநாயகத்தை மேம்படுத்த
அதற்கான சட்டம், விதிமுறைகளை மேம்படுத்த
வேண்டும். மக்களின் ஆதரவை பொறுத்தே கீழ்நிலையில் ஜனநாயகத்தை மேம்பாடு செய்வது என்ற
நோக்கத்தில் வெற்றி பெற முடியும்.
எனவே பொதுமக்களின் நலன் தொடர்பான
பிரச்சினைகளை சரியான வகையில் கையாள
வேண்டும் என்று ஹூ தெரிவித்ததாக ஜிங்குவா
செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் 17-வது மாநாட்டில் பங்கேற்பதற்காக
38 தொகுதிகளிலிருந்து 2220 பிரதிநிதிகள் தேர்வு
செய்யப்பட உள்ளனர். இந்த பிரதிநிதிகளின்
வெற்றியை உறுதி செய்யும்படி கட்சியின்
அதிகாரபூர்வ இதழான "பீப்பிள்ஸ் டெய்லி'
கேட்டுக்கொண்டுள்ளது. கட்சியின் தேசிய
மாநாடு 5 ஆண்டுக்கு ஒருமுறை கூடி புதிய
தலைவரை தெரிவு செய்து, நாட்டின் துரித
வளர்ச்சிக்கான திட்டத்தை முடிவு செய்கிறது.
(தினமலர் நாளிதழ் செய்தி)
27-11-06
தமிழோசை பரப்பும் சீன வானொலி:
ஈரோடு:
""தேன் தமிழோசையை பரப்புவதில்
சீன வானொலியும் முக்கிய பங்கு
வகிக்கிறது,'' என மாவட்ட முதன்மைக்
கல்வி அதிகாரி பாராட்டினார்.
"அனைத்து இந்திய சீன வானொலி
நேயர்கள் மன்றம்' மற்றும் ஈரோடு
சீன வானொலி நேயர்கள் இணைந்து
நடத்திய ஐம்பெரும் விழா ஈரோடு
வேளாளர் கல்லும்ரியில் நேற்று
நடந்தது.
மாவட்டத் தலைவர் செல்வம்
தலைமை வகித்தார். பொருளாளர்
ரவிச்சந்திரன் வரவேற்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் குப்புசாமி பேசியதாவது:
இந்தியா, சீனா நட்புறவு ஆண்டு விழாவும்
இங்கு கொண்டாப்படுகிறது.
தற்போது சீன அதிபர் இந்தியாவு
வந்துள்ளார்.
சீனா வானொலி சார்பாகவும்
நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தமிழகத்தில் தோன்றிய தலைவர்களும், கவிஞர்களும் தேன் தமிழோசை
உலகமெலாம் பரவ பாடுபட்டது போல்,
சீன வானொலியும் தமிழின் புகழை பரப்பி வருகிறது.
இந்திய, சீன நட்புறவு மேன் மேலும்
தொடர இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடந்து நடைபெறுவது அவசியம்.
இதன் மூலம் இரு நாடுகளிடையே மொழி, கலாச்சாரம், நட்புறவு வளர்ச்சி அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சீன வானொலி தெற்காசிய
மொழிகள் பிரிவு துணைத் தலைவர்
சுன் ஜியான் ஹி, தமிழ் பிரிவு தலைவர் கலையரசி ஜூ ஜூவான் குவா, நேபாள
பிரிவு தலைவர் ஜங் யு, சிங்கள மொழி
பிரிவு துணைத் தலைவர் செங் லி,
முன்னாள் சீன வானொலி நிபுணர்
கடிகாசலம், ரெட்கிராஸ் கவுரவ
செயலாளர் தாமஸ் ஜான் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.
நிர்வாக செயலாளர் பரமசிவம்
நன்றி கூறினார்.
(27-11-06 - தினமலர் நாளிதழ் செய்தி) பீஜிங்:"சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவின் இந்திய சுற்றுப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது,'என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் லீ ஜாவோசிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:அதிபர் ஹூ ஜிண்டாவோ
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப் பயணம் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் வெற்றியை பெற்றுள்ளது. சுற்றுப் பயணம் மேற்கொண்ட நாடுகளுடன் நட்புறவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு நம்பிக்கை, ஒருங்கிணைந்த செயல்பாடு, இரு தரப்பு வர்த்தகம்
ஆகியவை மேம்பட்டுள்ளது. ஹூவின்
சுற்றுப் பயணத்தில் சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே பல்வேறு
துறைகள் தொடர்பாக 54 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம்
அண்டை நாடுகளுடன் இணக்கமான
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிய
நாடுகளில் அமைதியான சூழ்நிலை
ஏற்படுவதற்கும் அதிபரின் சுற்றுப்
பயணம் வழி வகுத்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே முதலீடுகளை ஊக்குவிப்பது, தகவல் தொழில் நுட்பம் மற்றும் கட்டமைப்பு
வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இவ்வாறு லீ கூறினார்.
இந்தியாவுடன் நிலைத்த நட்பு: சீனா விருப்பம்.
பெய்ஜிங், நவ.24:
சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவின் இந்திய
விஜயத்துக்குப் பின்னணியில், இந்தியாவுடன்
நீண்டகால, நிலையான நட்பு ஏற்படுத்திக் கொள்ள
ஆயத்தங்கள் செய்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக
செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ இது குறித்துக் கூறியது:
சீன அதிபர் இந்தியா வந்தபோது, அவருடன் இந்தியத்
தலைவர்கள் மற்றும் பல்வேறு சமுதாயத்தினருடன்
விரிவான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் அவரது இந்தியப் பயணம் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
இருதரப்பு உறவு மேம்பாட்டை துரிதப்படுத்துவதற்காக,
இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற நாங்கள்
விரும்புகிறோம். இது தொடர்பான எதிர்காலத் திட்டங்கள்
குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தலைவர்கள் திட்டமிட்ட பாதையில் இருதரப்பு
உறவும் தொடரும் என்று நம்புகிறோம் என்றார்
அவர்.
இந்திய-சீன ஒப்பந்தத்தில் அணுசக்தித் துறையில்
ஒத்துழைப்பு, எல்லைப் பிரச்சினை போன்ற
கவனத்துக்குரிய அம்சங்கள் குறித்து அவர் கருத்து
ஏதும் தெரிவிக்கவில்லை.
அதிபர் ஹூ ஜிண்டாவோ நவம்பர் 20-ல் இந்தியா
வந்தார். நவம்பர் 23 வரை இந்தியாவில் இருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்த ஒரே சீன அதிபர் ஹூ ஜிண்டாவோதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் சீனா
உறவு மேம் பட ஐந்து அம்சம்.
"இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவு மேம் பட
ஐந்து அம்ச நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும்,''
என்று சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடந்த வர்த்தக அமைப்புகளின்
மாநாட்டில் அதிபர் ஹூ பேசியதாவது:
இந்தியா மற்றும் சீனா இடையே தற்போது நடந்து
வரும் இருதரப்பு வர்த்தகத்தின் அளவு மிக
குறைவானதே.
இந்நிலை மேம்படவும், இரு நாடுகளுக்கு இடையே
தொழில்நுட்ப ஒத்துழைப்பு உருவாகவும் ஏராளமான
வாய்ப்புகள் உள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே உறவு மேம்பட ஐந்து
அம்ச நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அவற்றில் தாராள வர்த்தகம், வர்த்தக விஸ்தரிப்பு,
பல்வகைப்படுத்துதல் ஆகியவை முக்கியமானவை.
எல்லைப்பகுதியில் வர்த்தகத்தை மேம்படுத்துவதும்
முக்கியமான நடவடிக்கையாக உள்ளது.உலகளவில்
பொருளாதாரத்தில் இந்தியாவும், சீனாவும் வேகமாக
வளர்ந்து வருகின்றன.
இரு தரப்புக்கும் பலன் அளிக்கக்கூடிய உறவு உருவாக
வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதற்கு தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, விவசாயம்
ஆகிய துறை துறைகளில் இரு நாடுகளுக்கு
இடை யே ஒத்துழைப்பு அதிகம் தேவை.
இந்தியாவும், சீனாவும் இணைந்து
செயலாற்றினால், 21ம் நூற்றாண்டு,
ஆசியாவின் நூற்றாண்டாக அமையும்.
வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு சாதகமான
சூழ்நிலையை உருவாக்க வேண்டும். உலக வர்த்தக
அமைப்பிலும், வளரும் நாடுகளின் உரிமைகளை
நிலை நிறுத்தும் போராட்டத்திலும் இருநாடுகளும்
இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அதிபர் ஹூ பேசினார்.
சீன அரசு விளக்கம்: சீன அதிபர் ஹூ
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு
இருந்த போது, டில்லியிலும், மும்பை யிலும்
திபெத்தியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சீன அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சீனாவின் பிடியில் இருந்து திபெத்தை விடுவிக்க
வேண் டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து
சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர்
ஜியாங் யூவிடம் கேட்ட போது, ""திபெத் தன்னாட்சி
பகுதி, பழங்காலத்தில் இருந்தே சீனாவுக்கு உட்பட்ட
பகுதியாக இருந்து வருகிறது. திபெத் விவகாரம்
சீனாவின் உள்நாட்டு விவகாரம்,'' என்று பதில்
அளித்தார்.
ஹுசிந்தாவின்
பயணத்துக்கான
சீன-இந்திய
அரசின் ஏற்பாடு....!
சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் இந்தியாவில்
மேற்கொள்ளும் அரசு முறை பயணத்துக்கு, சீன
மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஆக்கப்பூர்வமாக
ஏற்பாடு செய்து வருகின்றன. இப்பயணம்
வெற்றிகரமாக நடைபெறும் என சீனா நம்புகிறது
என்று, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்
தொடர்பாளர் சியாங் யூ அம்மையார் தெரிவித்தார்.
இன்று பெய்ஜிங்கில் பேசிய அவர், கடந்த 10
ஆண்டுகளில் சீன அரசுத் தலைவர் இந்தியாவில்
பயணம் மேற்கொள்வது, இதுவே முதல் தடவை.
இரு நாட்டு பாரம்பரிய நட்பை வலுப்படுத்தி,
அரசியல் பரஸ்பர நம்பிக்கையையும் பல்வேறு
துறைகளிலான பரஸ்பர நலன் தரும்
ஒத்துழைப்பையும் ஆழமாக்குவதில்,
இது ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் என்றும்,
இரு நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில்
இரு நாட்டுறவின் எதிர்கால வளர்ச்சி திசையை
திட்டமிட்டு, உலகிற்கு புதியதொரு செய்தியை
அளிப்பார்கள்.
அதாவது, சீன-இந்திய உறவு, இரு
நாடுகளுக்கும் வாய்ப்பை வழங்குவது மட்டுமல்ல,
உலகின் அமைதி, உறுதிப்பாடு, வளர்ச்சி
ஆகியவற்றுக்கும் பங்காற்றும் என்பதே
அச்செய்தி என்றும் கூறினார்.
20ம் தேதி இந்தியா வருகிறார்
சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ!
பீஜிங்:சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, வரும்
20ம் தேதி இந்தியா வருகிறார்.
சீன அதிபரின் பயணம் குறித்து பீஜிங்கில்
சீன வெளியுறவு அமைச்சகம் நேற்று
வெளியிட்ட செய்திக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:
ஜனாதிபதி அப்துல் கலாம் விடுத்த அழைப்பை
ஏற்று, வரும் 20ம் தேதி அதிபர் ஹூ
ஜிண்டாவோ இந்தியா செல்கிறார்.
அங்கு, 23ம் தேதி வரை இருப்பார். பின்னர்,
பாகிஸ்தான் புறப்பட்டுச் செல்கிறார்.
அங்கு, 26ம் தேதி வரை தங்குகிறார்.
இதன் பின்னர், வியட்நாம் மற்றும் லாவோஸ்
நாடுகளுக்கு பயணமாகிறார்.
இவ்வாறு செய்திக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
பயணத்தின் போது விவாதிக்கப்பட உள்ள
விவகாரங்கள் குறித்து தகவல்கள்
வெளியிடப்படவில்லை.
சீனாவில் ஆளும் கம்யூ., கட்சியின்
பொதுச்செயலரும், அதிபருமான ஹூ
ஜிண்டாவோ பதவியேற்ற பின்னர், முதல்
முறையாக இந்தியா வருகிறார். இந்த பயணத்தின்
போது ஜனாதிபதி, பிரதமர் உட்பட முக்கிய
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்கிறார்.
அப்போது விவாதிக்கப்படும் விவகாரங்களில், முக்கியமாக
எல்லை பிரச்னை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியாவின் இரு பெறும் அதிகார மையங்களாகத் திகழும்
இந்த இரு நாடுகளும், மண்டல அளவிலான வர்த்தக
ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் என தெரிகிறது.
உலகளவில் பெரும் பொருளாதார சக்திகளாகத்
திகழும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே
பொருளாதார ஒத்துழைப்பு சமீப காலமாக வேகமாக
வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் அடையாளமாக,
கடந்த ஜூலை மாதத்தில் நாதுல்லா கணவாய்
வழியிலான வர்த்தகம், 44 ஆண்டுகளுக்கு பின்னர்
மீண்டும் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
***** ** **** ** ***** ** *****
இந்திய சீன எல்லை பிரச்னையில்
முன்னேற்றம்......
* சீன அரசு அறிக்கையில் தகவல்*
பீஜிங்: இந்தியாசீனா இடையிலான எல்லைப்
பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில்
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன
வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ வரும்
20ம் தேதி இந்தியா வரவுள்ளார்.
அப்போது, இருதரப்புக்கும் இடையே
விவாதிக்கப்படும் விவகாரங்களில்
இந்திய சீன எல்லைப் பிரச்னை
முக்கியமானதாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே,
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
எம்.கே.நாராயணன் மற்றும் சீனாவின்
முன்னாள் வெளியுறவு அமைச்சர் டாய்
பின்குவோ இருவரும் எல்லைப்பிரச்னை
தொடர்பான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையில்
கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில்,
எல்லைப் பிரச்னை குறித்து சீனா திருப்தி
தெரிவித்துள்ளது.
சீன அரசு வெளியிட்டுள்ள,
"சீன வெளியுறவு விவகாரங்கள்2006'
ஆண்டறிக்கையில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ள
தாவது: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான
எல்லைப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில்
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில்
வெளிப்படையான நிலையும், அமைதியும் நிலவுகிறது.
சீனாவின் முன்னாள் பிரதமர் வென் ஜியாபாவோவின்
கடந்த ஆண்டு இந்தியப் பயணத்தின் போது
மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தம்
எல்லைப் பிரச்னையின் முதல்கட்ட பேச்சுவார்த்தை
வெற்றிகரமாக அமைய துணை புரிந்துள்ளது.
இரு
தரப்புக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு சீரான
வளர்ச்சியை கண்டு வருகிறது. மேலும், நட்புறவான
அண்டை நாடு என்ற உறவை பலப்படுத்தும் வகையில்
இருதரப்பு ராணுவ பரிமாற்றம் மற்றும் பரஸ்பர
ஒத்துழைப்புக்கு இரு நாடுகளும் ஒப்புக்
கொண்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.