சீனப்பெருஞ்சுவரின் துல்லியமான
நீளம் 2008-ல் தெரியும்!
பெய்ஜிங், அக். 29: உலக அதிசயங்களுள் ஒன்றான
சீனப் பெருஞ்சுவரின் நீளத்தை அளக்கும் பணி தற்போது நடந்துவருகிறது.
இந்தப் பணி 2007-ம் ஆண்டின் இறுதியில் முடியும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, சீனப்
பெருஞ்சுவரின் துல்லியமான நீளம் 2008-ல்
உலகுக்கு அறிவிக்கப்படும்.
சீனாவின் பாரம்பரியக் கலாசாரத் துறை
மற்றும் நில அளவை -வரைபடத் துறை
இணைந்து இந்தப் பணியை செய்துவருகின்றன.
6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை அச்சுவர்
நீண்டிருப்பதாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால்,
மேலும் பல பகுதிகளில் சீனபெருஞ்சுவர்
இருக்கும் விவரம் வெளி உலகுக்குத்
தெரியாமலேயே இருந்துவருகிறது.
1980-களில், இச்சுவரின் உண்மையான நீளத்தை
அளக்க முற்பட்டனர். அப்போது சுவரைப் பற்றிய
முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.
மேலும் தொழில்நுட்பமும் தேவையான அளவு
வளர்ந்திருக்கவில்லை. எனவே, சீனப் பெருஞ்சுவரின்
நீளத்தை சரியாக அளக்க முடியவில்லை.
பாதுகாப்பு நடவடிக்கைகள்: சீனப் பெருஞ்சுவரின்
மீது எழுதவும், வாகனங்கள் செல்லவும் சீன அரசு
தடைவிதிக்கத் திட்டமிட்டுள்ளது.
அச்சுவரை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை
எடுக்கப்படுகிறது.
சீனப் பெருஞ்சுவரில் உள்ள மண், செங்கல்
ஆகியவற்றை எடுப்பது, சுவரில் மரம் நடுவது,
கண்டபடி எழுதுவது, பெயர்களைப் பொறிப்பது
போன்ற செயல்களுக்கு இந்தப் புதிய விதி
முறையின்படி தடை விதிக்கப்படும். இப்
புதிய விதி, டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு
வரும்.
சுவரின் மீது வாகனங்களில் பயணிப்பது,
சுற்றுலா பயணிகள் செல்லத் தடைவிதிக்கப்
பட்டுள்ள பகுதிகளில் நடமாடுவது ஆகியவையும்
தடைசெய்யப்படும்.
இந்தத் தடையை மீறும் தனிநபருக்கு ரூ. 2 லட்சத்து
81 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
தடையை மீறுவது நிறுவனமாக இருந்தால்,
அதனிடமிருந்து ரூ. 28 லட்சத்து 12 ஆயிரத்து
500 வரை அபராதத் தொகை வசூலிக்கப்படும்.
சீனப் பெருஞ்சுவரின் இயற்கையான வடிவத்தை
பேணிக் காப்பதற்காக, அதன்மீது புதிதாக எதுவும்
கட்டத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பெருஞ்சுவர் பாதுகாப்புக்காக வசூலிக்கப்படும்
நிதிக்கு தாராளமாக அன்பளிப்பு வழங்குமாறு
சீன அரசு பொதுமக்களையும், நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment