
சீன- ஆப்பிரிக்க ஒத்துழைப்பு கருத்தரங்கின்
5வது உயர் நிலை அதிகாரி கூட்டம்
இன்று பெய்சிங்கில் நிறைவடைந்தது.
சீன துணை வணிக துறை
அமைச்சர் வே சியே குவே,
சீனாவிலுள்ள ஆப்பிரிக்காவின்
Togo தூதர் தா அம்மா, நிறைவு
விழாவில் உரை நிகழ்த்தினார்.
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு கருத்தரங்கு
நிறுவப்பட்ட 6 ஆண்டுகளாக, பல்வேறு
துறைகளில் இரு தரப்பு பரஸ்பர நலன்
தரும் ஒத்துழைப்பு வெகுவிரைவில்
வளர்ச்சியடைந்துள்ளது என்றார்,
வே சியே குவே.
சீனா, ஆப்பிரிக்க நாடுகளுடன் தூதாண்மை
உறவு நிறுவப்படதன் 50ம் ஆண்டு,
இவ்வாண்டு ஆகும்.
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு கருத்தரங்கின்
பெய்சிங் உச்சி மாநாடு, சீன-ஆப்பிரிக்க நட்புறவு
வரலாற்றில் மிக முக்கிய அலுவலாகும்.
இது சீன-ஆப்பிரிக்க உறவை மேலும்
வலுப்படுத்தும் என்று தா அம்மா கூறினார்.
No comments:
Post a Comment