
முதல் நேரடி ஒளிபரப்பு செயற்கைக்கோளை
விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா...!
பெய்ஜிங், அக். 30: வீடுகளுக்கு தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கு
உதவியாக,
"சைனோசாட்-2''
என்ற புதிய செயற்கைக் கோளை சீனா
வெற்றிகரமாக ஞாயிறு அதிகாலை ஏவியது.
இந்த செயற்கைக் கோள் முழுக்க முழுக்க
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
இதன் எடை 5.1 டன்கள். இதில் 22
டிரான்ஸ்பான்டர்கள் உள்ளன.
இதன் ஆயுள்காலம் மொத்தம் 15
ஆண்டுகள். அதில் 12 ஆண்டுகள்
புவி சுற்றுப்பாதையில் இருந்துகொண்டே
சேவையைத் தரவல்லது.
""லாங் மார்ச்-பி'' என்ற சீனத்தின் சொந்தத்
தயாரிப்பான ராக்கெட் இதை விண்ணில்
கொண்டு செலுத்தியது.
ஏவப்பட்ட 25-வது நிமிஷம் இது ராக்கெட்டிலிருந்து
பிரிந்து புவிவட்டப் பாதையில் நிலைபெற ஆரம்பித்தது.
தகவல் தொடர்புக்கும், வானொலி,
தொலைக்காட்சி ஒலி-ஒளிபரப்புக்கும் இது
மிகவும் பயன்படக்கூடியது.
சீனா, ஹாங்காங், மகாவ், தைவான் ஆகிய
நாடுகளில் உள்ளவர்கள் இந்த செயற்கைக்
கோள் உதவியால் எல்லா தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளையும் தெளிவாகக் காணலாம்.
சிறிய டிஷ் இருந்தால் போதும். பண்ணை
வீடுகளில் இருப்பவர்களுக்கு இந்த
செயற்கைக் கோள் உதவியால்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்
பார்ப்பது இனி எளிதாகிவிடும்.
சீனத்தில் தயாராகும் நிகழ்ச்சிகள் மட்டும்
அன்றி வெளிநாட்டு சேனல்களையும்
பார்க்க முடியும். அத்துடன் தகவல்
தொடர்புக்கும் இது பெரிதும் உதவும்.
சீனாவில் இப்போது 40 கோடிப் பேர்
தொலைக்காட்சி வைத்திருக்கிறார்கள்.
செயற்கைக்கோள் ஏவப்பட்டதை அடுத்து
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
1998-ல் சைனோசாட்-1 ஏவப்பட்டது.
சைனோசாட்-3 2007-ல் ஏவப்படவுள்ளது.
அது வானொலி, தொலைக்காட்சி
சேவைகளுக்காகவே ஏவப்படவிருக்கிறது.
No comments:
Post a Comment